Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென் ஆப்பிரிக்கா: 342 கிலோ கிராம் அளவிலான சிங்க எலும்புகள் பறிமுதல்

தென் ஆப்பிரிக்கா: ஜோஹானஸ்பர்க் விமான நிலையத்தில் சுமார் 342 கிலோ கிராம் அளவிலான சிங்க எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
தென் ஆப்பிரிக்கா: 342 கிலோ கிராம் அளவிலான சிங்க எலும்புகள் பறிமுதல்

(படம்: AFP)

தென் ஆப்பிரிக்கா: ஜோஹானஸ்பர்க் விமான நிலையத்தில் சுமார் 342 கிலோ கிராம் அளவிலான சிங்க எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடர்பில், மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மலேசியாவிற்கு அனுப்பப்படவிருந்த சிங்க எலும்புகளைப் பற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில், மனிதப் பராமரிப்பின்கீழ் வளர்க்கப்படும் சிங்கங்களின் எலும்புகளை ஏற்றுமதி செய்வது குற்றமில்லை. இருப்பினும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு உரிய உரிமம் இருக்கவேண்டும்.

சிங்கத்தின் எலும்புகள் நகைகள் செய்வதற்காகவும் மருத்துவக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்