Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரே நாளில் 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருள்களை விற்ற 'உதட்டுச் சாயத் தம்பி'

ஒரே நாளில் 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருள்களை விற்ற 'உதட்டுச் சாயத் தம்பி'

வாசிப்புநேரம் -
ஒரே நாளில் 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருள்களை விற்ற 'உதட்டுச் சாயத் தம்பி'

படம்: Pixabay

சீனாவில், தம் மீதே ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தி, அவற்றை நேரலையில் விற்பனை செய்து பிரபலம் அடைந்தவர் லி ஜியாசி (Li Jiaqi), என்ற ஆடவர்.

அவர் ஒரே நாளில் 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க பொருள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக Bloomberg நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒற்றையர் தினத்தை முன்னிட்டு, Alibaba குழுமம், அதன் வருடாந்தர இணையத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது.

விற்பனையின் முதல் நாளிலேயே, லி சாதனை படைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், லி ஒரு சாதாரணமான விற்பனையாளர் அல்லர்.

அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு..அதுதான் 'உதட்டுச் சாயத் தம்பி'.

அவர் ஒரு முறை ஐந்தே நிமிடங்களில் 15,000 உதட்டுச் சாயங்களை விற்பனை செய்ததாக South China Morning Post செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

லி, 2018-ஆம் ஆண்டில், '30 வினாடிகளில் ஆக அதிகமாக உதட்டுச் சாயம் பூசியவர்' என்ற கின்னஸ் (Guinness) உலகச் சாதனையையும் படைத்துள்ளார்.

அவருடைய 2 பில்லியன் டாலர் மதிப்புமிக்க விற்பனை, Alibaba-வின் Taobao இணைய வர்த்தகத் தளத்தில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளின் விற்பனையையும் மிஞ்சிவிட்டதாக நிறுவனம் சொன்னது.

நேரலை விற்பனையில் சுமார் 250 மில்லியன் பார்வையாளர்கள் இணைந்ததாக Bloomberg குறிப்பிட்டது.

ஒற்றையர் தினம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி அன்று இடம்பெறும்.

அதை முன்னிட்டு, 3 வாரங்களுக்கு இணையத் தள்ளுபடி விற்பனை தொடரும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்