Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வாழ்க்கை முழுவதையும் சிவப்பு நிறத்துக்கு அர்ப்பணித்த பெண்

வாழ்க்கையை முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தோடு இணைந்திருக்குமாறு வடிவமைத்துக்கொண்ட பெண், மரணத்திற்கு அப்பாலும் சிவப்பு நிறத்தோடு சேர்ந்திருக்க ஏற்பாடு செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
வாழ்க்கை முழுவதையும் சிவப்பு நிறத்துக்கு அர்ப்பணித்த பெண்

(படம்: Reuters)

வாழ்க்கையை முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தோடு இணைந்திருக்குமாறு வடிவமைத்துக்கொண்ட பெண், மரணத்திற்கு அப்பாலும் சிவப்பு நிறத்தோடு சேர்ந்திருக்க ஏற்பாடு செய்துள்ளார்.

போஸ்னியாவைச் சேர்ந்த ஸோரிக்கா ரெபர்நிக் என்ற 67-வயதுப் பெண் வாழ்வது சிவப்பு நிற வீட்டில், தூங்குவது சிவப்பு நிறப் படுக்கையில், சாப்பிடுவது சிவப்பு நிறத் தட்டுகளில்... முடியையும் அவர் சிவப்புச் சாயம் பூசித்தான் அலங்கரித்துக்கொள்கிறார்.

அவ்வாறு, சிவப்பு நிறத்தைச் சுற்றி வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ள ரெபர்நிக், மாண்ட பிறகும் சிவப்பு நிறத்தை இழக்கத் தயாராக இல்லை.

தமக்கும் தமது கணவருக்கும் சிவப்பு நிறக் கல்லறைகளை ஏற்பாடு செய்துள்ளார்.

கல்லறைகளை அமைக்க இந்தியாவிலிருந்து சிவப்பு நிறக் கருங்கல்லை (granite) தருவித்துள்ளார்.

சிவப்பு நிறம் தமக்கு வலிமையைக் கொடுப்பதாகவும், 18 வயதிலிருந்து திடீரென்று சிவப்பு நிறத்தை அணியவேண்டும் என்ற எண்ணம் வந்தாகவும் ரெபர்நிக் கூறுகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்