Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லண்டன்: மருத்துவமனை உணவை உட்கொண்ட 2 நோயாளிகள் மரணம்

லண்டன் மருத்துவமனை ஒன்றில் மருத்துவமனை உணவை உட்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த 2 நோயாளிகள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
லண்டன்: மருத்துவமனை உணவை உட்கொண்ட 2 நோயாளிகள் மரணம்

(படம்: Pixabay)

லண்டன் மருத்துவமனை ஒன்றில் மருத்துவமனை உணவை உட்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த 2 நோயாளிகள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நோயாளிகளும் சாண்ட்விச், சாலட் உணவு வகைகளை உட்கொண்டதாகவும் அது நச்சுணவாக மாறி கிருமித்தொற்று ஏற்பட்டு மாண்டதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அந்தக் கிருமித்தொற்றால் ஏற்கனவே மூன்று பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லிஸ்டிரியா (listeria) என்னும் அந்தக் கிருமி நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையும் கர்ப்பிணிகளையும் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

லிஸ்டிரியா கிருமித்தொற்று அரியவகையானது, அது பால் பொருள்களிலும் ready-to-eat எனப்படும் ஆயத்த உணவிலும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்