Images
  • LB
    படம்: REUTERS

லண்டன் கர்ப்பிணி கொலை: சந்தேக நபர் கைது

தெற்கு லண்டனில் கடந்த மாதம் கர்ப்பிணி ஒருவர் கத்திக் குத்தால் மாண்டார்.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

26 வயது கெல்லி மேரி, அவர் வீட்டில் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அப்போது அவர் வயிற்றில் இருந்த சிசு மருத்துவ உதவியாளர்களால் வெளியே கொண்டுவரப்பட்டுப் பின்னர் சிகிச்சை பலனின்றி மாண்டது.

கைது செய்யப்பட்ட ஆடவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
 

Top