Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போயிங் 737 MAX ரக விமானங்கள் நீண்டகாலம் முடக்கப்படலாம் என அஞ்சும் விமான நிறுவனங்கள்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள போயிங் 737 MAX ரக விமானங்களின் தற்காலிக முடக்கம், நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என விமான நிறுவனங்கள் அஞ்சுகின்றன. 

வாசிப்புநேரம் -
போயிங் 737 MAX ரக விமானங்கள் நீண்டகாலம் முடக்கப்படலாம் என அஞ்சும் விமான நிறுவனங்கள்

(படம்: REUTERS/Joshua Roberts)

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள போயிங் 737 MAX ரக விமானங்களின் தற்காலிக முடக்கம், நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என விமான நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

அந்த முடக்கத்தால் இதுவரை நட்டம் ஏற்படாமல் இருந்தாலும், அது தொடர்ந்தால், விமான நிறுவனங்கள் பொருளியல் ரீதியாகப் பாதிப்படையலாம் எனக் கருதப்படுகிறது.

157 பேரை ஏற்றிச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் மாண்டனர்.

அதனை அடுத்து, போயிங் 737 MAX ரக விமானங்கள் உலகம் முழுவதிலும் முடக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்