Images
  • toilet - 3

பயணம் செய்யும்போது சுத்தமான கழிப்பறைகளைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


நாம் பயணம் செய்யும்பொழுது சில வேளைகளில் சுத்தமான கழிப்பறைகளைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கலாம். பழக்கப்படாத இடம், புரியாத மொழி ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.

அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தொழில்நுட்பம் நமக்குப் பெரும் உதவியாக அமைகிறது.

பல செயலிகள் நமக்கு மிக அருகிலுள்ள கழிப்பறைகளையும், அவற்றிலுள்ள சக்கரநாற்காலி வசதிகள், தூய்மை நிலை போன்றவற்றையும் தெரிவித்து அப்பிரச்சினையைச் சுலபமாகத் தீர்க்க உதவுகின்றன.

பிலிப்பீன்ஸ், ஹாங்காங், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூயார்க் போன்ற வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு செயலிகள் செயல்படுகின்றன.

உலகளவில் இயங்கும் செயலிகளும் உண்டு. அவை, உலகில் சுமார் 190,000 இடங்களில் உள்ள கழிவறைகள் பற்றித் தகவல் வழங்கும். 

Top