Images
  • Love Bank (1)
    (படம்: Pixabay) 

காதல் வங்கியில் நினைவுகளைச் சேகரிக்கும் தம்பதியர்

ஸ்லோவாக்கியாவில் ஒரு சிறிய நகரில், அன்பர் தினத்தை முன்னிட்டு, தங்கள் காதல் கதைகளைக் 'காதல் வங்கியில்' சேகரிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர், தம்பதியர்.

1844ஆம் ஆண்டில் ஸ்லோவாக்கிய கவிஞர் எண்ட்ரேஜ் ஸ்லாட்கொவிச் (Andrej Sladkovic) எழுதிய 'மரினா(Marina)' எனும் உலகின் ஆக நீளமான காதல் கவிதை இடம்பெற்றுள்ள கண்காட்சியில், 'காதல் வங்கி' உள்ளது.

2,900 வரிகளைக் கொண்ட காதல் கவிதையைத் தமது காதல் அனுபவத்தைக் கொண்டு எழுதினார், ஸ்லாட்கொவிச் (Sladkovic).

அவருக்கும் அவரது காதலி மரினா(Marina) எனும் மரியா பிச்லோவாவுக்கும் (Maria Pischlova) இடையே நிறைவேறாத காதலைப் பற்றியது அந்தக் கவிதை.

பன்ஸ்க்கா ஸ்டியாவ்னிச்சா(Banska Stiavnica) நகரில், மரினா வசித்த வீடு இப்போது காதலின் மையப் பகுதியாகக் கருதப்படுகிறது.

ஸ்லாட்கொவிச் (Sladkovic) எழுதிய கவிதையை மையமாகக் கொண்டு அந்த வீட்டில் காதல் கண்காட்சியே நடத்தப்படுகிறது.

அந்த வீட்டின் அடியில் உள்ள சுரங்கப் பாதையில் 100,000 சிறிய செருகுப்பெட்டிகள் கொண்ட 'காதல் வங்கி' உள்ளது.

காதல் ஜோடிகள் தங்கள் காதல் பயணத்தின் நினைவுச் சின்னங்களையும் காதலை நினைவுகூரும் பொருட்களையும் 'காதல் வங்கியில்' சேர்த்து வைக்கலாம்.

ஆண்டுக்குச் சில முறை மட்டுமே 'காதல் வங்கி' திறந்திருக்கும்.

அடுத்து அது அன்பர் தினத்தன்று திறக்கப்படும்.

Top