Images
  • Lovestruck Couple
    (படம்: AFP/Johannes Myburgh) 

திருமணப் படங்கள் எடுக்க உலகெங்கும் பயணம் செய்யும் தம்பதி


பிரேஸிலின் புகழ்பெற்ற பாலிஸ்டா அவென்யூவில் (Paulista Avenue) மணக்கோலத்தில் நின்ற தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவிக்க அவ்வழி சென்றவர்கள் அனைவரும் கூச்சலிட்டனர்.

வாழ்த்துகளை ரசித்துக்கொண்டு அந்த தம்பதி நின்றனர்.

ஆனால் 52 வயது அடெமீர் அவெலினோவுக்கும் 45 வயது கலோஸியா சுடானுக்கும் இத்தகைய வாழ்த்துகள் பெறுவது இது முதல்முறை அல்ல.

உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அங்கு புதுமணத் தம்பதியைப் போல் பாவனை செய்து நிழற்படம் எடுப்பது அவர்களது வித்தியாசமான பொழுதுபோக்கு.

பல நாடுகளைச் சுற்றியுள்ள இருவரும் பிரேஸிலின் காதலர் தினத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

2014இல் திருமணம் செய்த அவர்களுக்கு அன்று எந்த நிழற்படங்களும் எடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அதற்கு ஈடுகட்ட இப்பொழுது அவர்களிடம் உலகெங்கும் எடுக்கப்பட்ட பல படங்கள் உள்ளன.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு மணக்கோலத்தில் படம் எடுக்க ஒரு முழு நாளை ஒதுக்க அவர்கள் தவறுவதில்லை.

'Getting married there' எனும் தலைப்பில் படங்களை அவர்கள் தங்களது Facebook, Instagram பக்கங்களில் பகிர்கின்றனர்.  

#casandoporaí #momentos #dubai #barcelona #lisboa #abudhabi #sydney

A post shared by Glaucia Antão (@glauciasudan) on


Top