Images
பல்கலைக்கழகத்தின் முன்னால் தீக்குளித்த ஃபிரஞ்சு மாணவர்
ஃபிரான்ஸ்: பல்கலைக்கழக உணவகத்தின் முன் தீக்குளித்த 22 வயது மாணவரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
தன்னுடைய பண நெருக்கடியைப் பற்றி Facebookஇல் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குப் பின் லியோன் (Lyon) நகரத்திலுள்ள அந்த உணவக வாசலில் மாணவர் தீக்குளித்தார்.
ஃபிரஞ்சு அதிபர் இமென்யுவல் மெக்ரோன், அவருக்கு முன் அதிபர் பொறுப்பை வகித்த இருவர், அரசியல் தலைவர் மரின் ல பென் ஆகியோர் தன்னுடைய மரணத்திற்குக் காரணம் என அந்த ஆடவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னுடைய திட்டம் குறித்து மாணவர் காதலியிடம் முன்னதாகவே தகவல் அனுப்பியிருக்கிறார்.
காதலி அது குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.