Images
  • macedonia name change (1)
    (படம்: AFP/Robert Atanasovski)

பெயர் மாற்றம் கண்டுள்ள நாடு

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாசடோனியா, இனி அதிகாரபூர்வமாக வடக்கு மாசடோனியாக் குடியரசு என்று அழைக்கப்படும்.

அந்நாட்டு அதிகாரிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கிரீஸுடன் பல்லாண்டாக நீடித்த சர்ச்சையைப் பெயர் மாற்றம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உறுப்புத்துவம் பெறவும் அது வழிவகுக்கும்.

இருப்பினும், புதிய பெயருக்கு கிறீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மாற்றம் நடப்புக்கு வரும்.

பெயர் மாற்றத்துக்கு எதிராக நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Top