Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஆர்ப்பாட்டம் செய்வது மூலம் கிருமித்தொற்று ஒழிந்துவிடப் போவதில்லை': பிரெஞ்சு அதிபர்

பிரான்ஸில் மீண்டும் தலைதூக்கியுள்ள கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஒற்றுமையும் விரிவாகத் தடுப்பூசி போடப்படுவதும் முக்கியம் என அந்நாட்டு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சுகாதார ஊழியர்களுக்குக் கட்டாய COVID-19 தடுப்பூசி, உணவகங்களுக்குள் நுழைய சிறப்பு COVID-19 அனுமதி அட்டை ஆகியவற்றை எதிர்த்து நேற்று (ஜூலை 24) பிரான்ஸ் முழுவதும் சுமார் 160,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் சொல்லக்கூடாது எனப் பலரும் கூச்சலிட்டனர்.

அது குறித்துப் பேசிய திரு. மக்ரோன், ஆர்ப்பாட்டம் செய்வது மூலம் கிருமித்தொற்று ஒழிந்துவிடப் போவதில்லை எனக் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை அவர் குறைகூறினார்.

அண்மை நாள்களில், பிரான்ஸின் தினசரி கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 20,000ஆகப் பதிவாகியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், அது சில ஆயிரமாகவே இருந்தது.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்