Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஸ்ட்ராஸ்பர்க் தாக்குதலுக்குப் பிறகு அந்நகருக்குச் சென்று இரங்கல் தெரிவித்த பிரெஞ்சு அதிபர்

ஸ்ட்ராஸ்பர்க் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் இமெனுவல் மெக்ரோன் (Emmanuel Macron) நேற்று (டிசம்பர் 14) அந்த நகர மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஸ்ட்ராஸ்பர்க் தாக்குதலுக்குப் பிறகு அந்நகருக்குச் சென்று இரங்கல் தெரிவித்த பிரெஞ்சு அதிபர்

(படம்: AFP/Pool)

ஸ்ட்ராஸ்பர்க் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் இமெனுவல் மெக்ரோன் (Emmanuel Macron) நேற்று (டிசம்பர் 14) அந்த நகர மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய 29 வயது செரிஃப் செக்கட் (Cherif Chekatt) என்பவரை நேற்று முன்தினம் (டிசம்பர் 13) காவல்துறை சுட்டுக்கொன்றது.

ஸ்ட்ராஸ்பர்க் நகர மக்களுக்கு, ஒட்டுமொத்த பிரான்சின் ஆதரவும் இருப்பதாக அதிபர் மெக்ரோன் கூறினார்.

ஸ்ட்ராஸ்பர்க் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் நால்வர் மாண்டதோடு 12 பேர் கடுமையாகக் காயமடைந்தனர்.

அந்தத் தாக்குதலை நடத்திய செக்கட் தனியாகச் செயல்பட்டாரா என்பதைக் கண்டறிய பிரெஞ்சு காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்