Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2025க்குள், 25 நாடுகளில் மலேரியா நோயை முற்றிலும் ஒழிக்க உலகச் சுகாதார நிறுவனம் இலக்கு

உலகச் சுகாதார நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள், 25 நாடுகளில் மலேரியா (Malaria) நோயை முற்றிலும் ஒழிக்கப் புதிய இலக்கைக் கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள், 25 நாடுகளில் மலேரியா (Malaria) நோயை முற்றிலும் ஒழிக்கப் புதிய இலக்கைக் கொண்டுள்ளது.

மலேரியா நோயை மேலும் அதிகமான நாடுகள் துடைத்தொழித்து வருவதாக அது தெரிவித்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமை உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதை முன்னிட்டு நிறுவனம் தனது இலக்கை முன்வைத்துள்ளது.

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 400,000 பேர் மலேரியா நோய்க்குப் பலியாகின்றனர்.

இருப்பினும் அதை முற்றிலும் துடைத்தொழிப்பது சாத்தியமானதே என்று உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

2017ஆம் ஆண்டில் தொடங்கிய திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டுக்குள், மலேரியா நோயைக் கட்டுக்குள் கொண்டுவர நிறுவனம் 21 நாடுகளுக்கு ஆதரவளித்தது.

திட்டத்தை விரிவுபடுத்தி, தற்போது கூடுதலாக 25 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்