Images
  • 25 NOV Malaria resistant mosquitos (1)
    படம்; REUTERS

2050ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்டத் திட்டம்

உலகில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

மனித குலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் ஆகப் பழைமையான நோய் மலேரியா.

உலகில் ஆண்டுதோறும் 200 மில்லியனுக்கும் அதிகமான மலேரியாச் சம்பவங்கள் பதிவாகின்றன.

பெரும்பாலும் குழந்தைகளே அதிகப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மலேரியாவை முழுமையாக ஒழிப்பது நிறைவேற்ற முடியாத கனவல்ல என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நோயை முற்றாகத் துடைத்தொழிக்க ஆண்டுக்கு இரண்டு பில்லியன் டாலர் நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, செனகல், மொஸாம்பிக் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. என்றாலும் அங்கு மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடிக்கின்றன.

இருப்பினும், தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 2050 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவே இல்லாத புதிய உலகை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Top