நச்சு நிரல் : உலக அளவில் 30,000 Mac மடிக் கணினிகளுக்குப் பாதிப்பு
உலகெங்கும் சுமார் 30,000 Mac மடிக்கணினிகள் நச்சு நிரலால்
உலகெங்கும் சுமார் 30,000 Mac மடிக்கணினிகள் நச்சு நிரலால்
பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரெட் கேனரி (Red Canary) பாதுகாப்பு நிறுவன ஆய்வாளர்கள் அது குறித்துத் தெரிவித்ததாக CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
Silver Sparrow எனும் அந்த நச்சு நிரல், mac OS இயங்கு தளத்தை குறிவைக்கும் வழக்கமான நச்சு நிரல் போல் இல்லை. அதன் விளைவு எப்படியிருக்கும் என்பது பற்றியும் தெளிவாகத் தெரியவில்லையென ரெட் கேனரி நிறுவனப் புலனாய்வாளர் டோனி லம்பேர்ட் (Tony Lambert) குறிப்பிட்டார்.
ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சொந்தச் சில்லுகளில் செயல்படும் Silver Sparrow நிரல் சென்ற நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் செயல்முறை குறித்தும் தெளிவான தகவல் இல்லை.
இம்மாதம் 17 ஆம் தேதி நிலவரப்படி, 153 நாடுகளில் உள்ள Mac மடிக் கணினிகளை Silver Sparrow மென்பொருள் பாதித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நச்சு நிரல் தாக்குதல்களைத் தடுக்கும் Malwarebytes
இணையத்தளம் தெரிவித்தது.