Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து: தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து சிறிது நேரம் வெளியே சென்ற COVID-19 நோயாளி மீது குற்றச்சாட்டு

நியூஸிலந்தில் தனிமைப்படுத்தப்படும் இடத்திலிருந்து சிறிது நேரம் தலைமறைவானதாக COVID-19 நோயாளி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்து: தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து சிறிது நேரம் வெளியே சென்ற COVID-19 நோயாளி மீது குற்றச்சாட்டு

(கோப்புப் படம்: REUTERS/Tatsiana Chypsanava)

நியூஸிலந்தில் தனிமைப்படுத்தப்படும் இடத்திலிருந்து சிறிது நேரம் தலைமறைவானதாக COVID-19 நோயாளி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் ஆக்லந்தில் நடந்தது.

தப்பிச் சென்ற ஆடவருக்கு 32 வயது என்று அதிகாரிகள் கூறினர்.

ஆடவர் ஜூலை 3-ஆம் தேதி புதுடில்லியில் இருந்து நியூஸிலந்து சென்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது ஜூலை 4-ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

இதுபோன்ற குற்றங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றும் ஆடவர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 6 மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது சுமார் 2,600 டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது ஆடவர் எங்கெங்கு சென்றிருந்தார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நியூஸிலந்து, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டுப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை.

அந்நாட்டுக் குடிமக்களும், நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளிலிருந்து வந்தால் அவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்