Images
  • handcuff - 1
    கோப்புப் படம்: TODAY

தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட ஆடவர்... 42 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

அமெரிக்காவின் மிஸோரி (Missouri) மாநிலத்தில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட ஆடவர் 42 ஆண்டுகள் கழித்துச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

1979ஆம் ஆண்டு, மூவரைக் கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது அவருக்கு வயது 18 .

42 ஆண்டுகளுக்குப் பின்னர் 62 வயது கெவின் ஸ்ட்ரிக்லேண்ட் (Kevin Strickland) குற்றம் புரியவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிஸோரி மாநிலத்திலேயே ஆக நீண்ட காலம் தவறாகச் சிறையில் அடைக்கப்பட்ட ஆடவர் அவர்தான் என்றது BBC செய்தி நிறுவனம்.

ஆனால் அந்த மாநிலச் சட்டத்தின்கீழ், நடந்த தவற்றுக்குத் திரு. ஸ்ட்ரிக்லேண்டிற்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது.

1978ஆம் ஆண்டு, வீட்டிலிருந்த மூவரை 4 பேர் சுட்டுக் கொன்றனர்.

சிந்தியா டக்ளஸ் (Cynthia Douglas) என்ற 4ஆவது பெண் காயங்களுடன் தப்பினார்.

அதன் தொடர்பில் திரு. ஸ்ட்ரிக்லேண்ட் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அந்தக் குற்றங்களை அவர் புரிந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது.

எனினும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆண்டுகள் கழித்துத் திரு. ஸ்ட்ரிக்லேண்ட் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை எனத் திருவாட்டி டக்ளஸ் குறிப்பிட்டதாக BBC தெரிவித்தது.

அவர் உதவ முன்வந்தார்.

திருவாட்டி டக்ளஸ் காலமான பின்னரும் அவருடைய குடும்பத்தினர் வழக்கைத் தொடர்ந்தனர்.

அதன் விளைவாக நேற்று (நவம்பர் 23) திரு. ஸ்ட்ரிக்லேண்ட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

Top