Images
  • handcuff - 1
    கோப்புப் படம்: TODAY

ஆஸ்திரேலியச் சிறையிலிருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தப்பிய ஆடவர் சரணடைந்தார்

ஆஸ்திரேலியாவில் 1990களில் சிறையிலிருந்து தப்பிய ஆடவர், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சரணடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு, ரம்பம், கம்பி வெட்டுக் கருவி ஆகியவற்றைக் கொண்டு, சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் இருந்த சிறையிலிருந்து அவர் தப்பியதாக நம்பப்படுகிறது.

அப்போது அவருக்கு 35 வயது.

அவரைத் தேடிப் பிடிக்க முடியவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை கூறியது.

தடை செய்யப்பட்ட செடியை வளர்த்த 2 குற்றச்சாட்டுகளுக்காக அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக Sydney Morning Herald செய்தி நிறுவனம் சொன்னது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12), அந்த 64 வயது ஆடவர், சிட்னி நகரில் உள்ள காவல்துறை நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

அவர் வீடில்லாமல் திரிந்ததாக Daily Telegraph செய்தி நிறுவனம் கூறியது.

சிறையிலிருந்து தப்பியதற்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

-AFP

Top