Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிட்டத்தட்ட 7 நாள்களுக்குக் கரடியின் தாக்குதலை எதிர்த்துப் போராடிய ஆடவர்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 நாள்களுக்குக் கரடியின் தாக்குதலை எதிர்த்துப் போராடியுள்ளார், ஒருவர்!

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 நாள்களுக்குக் கரடியின் தாக்குதலை எதிர்த்துப் போராடியுள்ளார், ஒருவர்!

அலாஸ்காவிலிருந்து (Alaska) மீட்கப்பட்ட அந்த ஆடவர், குணமடைந்து வருவதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை கூறியது.

அலாஸ்காவில் முகாம் அமைத்துத் தங்கியிருந்த அந்த ஆடவரைக், 'கிரிஸ்லி' (grizzly) வகையைச் சேர்ந்த கரடி தாக்கியதாக நம்பப்படுகிறது.

அவருக்குக் காலிலும், உடலின் நடுப்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

கரடி, தாக்குதலுடன் நிறுத்திவிடாமல், தம்மைப் பின்தொடர்ந்ததாக ஆடவர் சொன்னார்.

ஒவ்வோர் இரவும் கரடி, தம்முடைய முகாமுக்கு வந்ததாக அவர் கூறினார்.

அது ஒரு வாரத்திற்கு நீடித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, காவல்துறையினர், ஹெலிகாப்டர் வழி, வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஹெலிகாப்டரைக் கண்ட ஆடவர், உதவி கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரைக் காணவில்லை என்று காவல்துறையிடம் ஏற்கெனவே, புகார் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவர் தற்போது காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருகிறார்.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்