Images
  • manatee

கடற்பசுவின் முதுகில் 'Trump' என்று கீறப்பட்டது குறித்து விசாரணை

அமெரிக்காவில், கடற்பசு (manatee) ஒன்றின் முதுகில் 'Trump' என்று கீறப்பட்டுள்ளது குறித்து வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதற்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்கப் பொதுமக்களின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.

Manatee எனும் கடற்பசு, மெதுவாக நகர்ந்து செல்லும் அரிய வகைக் கடல்வாழ் பாலூட்டி வகை உயிரினம்.

Citrus County Chronical என்ற நிறுவனம் கடற்பசுவின் முதுகில் டிரம்ப் என்று கீறப்பட்டிருப்பதைக் காட்டும் காணொளியைப் பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியது.

அது குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பாதுகாக்கப்பட்ட விலங்கான கடற்பசுவை வதைத்தவருக்கு 50,000 டாலர் வரையிலான அபராதமும், ஓராண்டு காலச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  

Top