Images
  • manchester shooting (1)
    (படம்: AFP PHOTO / Oli SCARFF)

மென்செஸ்டரில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - 10 பேர் காயம்

பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் மொஸ் சைட் (Moss Side) வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

கரிபியத் திருவிழா நடைபெற்று முடிந்த சில மணிநேரத்திற்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதனால் அந்த வட்டாரத்தில் பலர் கூடியிருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தோன்றவில்லலை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

எதனால், யாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது பற்றிய தகவல்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Top