Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹனோய் : JW Marriott Hotel-லுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் முன்பதிவுகள் அனைத்தும் ரத்து

வியட்நாமிய அரசாங்கம், ஹனோயிலுள்ள JW Marriott Hotel-லுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் முன்பதிவுகள் அனைத்தையும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஹனோய் : JW Marriott Hotel-லுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் முன்பதிவுகள் அனைத்தும் ரத்து

(படம்: REUTERS/Jonathan Ernst/File Photo)

வியட்நாமிய அரசாங்கம், ஹனோயிலுள்ள JW Marriott Hotel-லுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் முன்பதிவுகள் அனைத்தையும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஹனோயில் சந்தித்துப் பேசவிருப்பதே அதற்குக் காரணம்.

இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு இம்மாதம் 27-ஆம் 28-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

உச்சநிலைச் சந்திப்பு முடியும் வரை எந்த விதமான முன்பதிவுகளையும் ஏற்பதில்லை என்று அந்த ஹோட்டல்கள் சுற்றுப்பயண நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளன.

அதன் காரணமாகத் தலைவர்களின் சந்திப்பு, அனேகமாக JW Marriott Hotel-டில் நடைபெறலாம் அல்லது இரு தலைவர்களில் ஒருவர் அங்கு தங்கலாம் என்ற ஊகம் உருவாகியுள்ளது.

உச்சநிலைச் சந்திப்பு நடைபெறும் சாத்தியமுள்ள மற்றோர் இடமாக வியட்நாம் தேசிய மாநாட்டு நிலையம் ஊகிக்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்