Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செவ்வாய்க் கோளில் உயிர்வாயுவா?

NASAவின் Perseverance வாகனம் தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறது.

வாசிப்புநேரம் -

NASAவின் Perseverance வாகனம் தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறது.

6 சக்கரங்கள் கொண்ட அந்த இயந்திரம், செவ்வாய்க் கோளின் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உயிர்வாயுவாக மாற்றியுள்ளது.

அவ்வாறு இன்னொரு கிரகத்தில் நடப்பது, இதுவே முதன்முறை என NASA கூறியது.

செவ்வாய்க் கோளில் கரியமில வாயுவை உயிர்வாயுவாக மாற்றுவதற்கு அது ஒரு முக்கியமான முதல் படி என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தொழில்நுட்ப செயல் விளக்கம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) நடைபெற்றது.

எதிர்காலத்தில், செவ்வாய்க் கோளை மனிதர்கள் ஆராய அது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

அதன் மூலம் விண்வெளி வீரர்களால் சுவாசிக்க முடிவதோடு, பூமிக்குத் திரும்புவதற்காகப் பெரிய அளவு உயிர்வாயுவை இங்கிருந்து எடுத்துச் செல்ல அவசியமின்றிப் போகலாம்.

MOXIE எனப்படும் ஆய்வுப் பெட்டி Perseverance வாகனத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

அது மின்சாரம், வேதியியல் ஆகியவற்றைக் கொண்டு, கரியமில வாயுவின் மூலக்கூறுகளைப் பிரிக்கிறது.

அதன் முதல் சோதனையில், அது 5 கிராம் உயிர்வாயுவை உருவாக்கியது.

அது சாதாரண நடவடிக்கையை மேற்கொள்ளும் விண்வெளி வீரர், 10 நிமிடங்களுக்குச் சுவாசிக்கப் போதுமானது.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்