Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முகக்கவசம்: மனிதர்களின் உயிர்காப்பு... விலங்குகளின் உயிர்க்கொல்லி

முகக்கவசம்: மனிதர்களின் உயிர்காப்பு... விலங்குகளின் உயிர்க்கொல்லி

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமித்தொற்றிலிருந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவும் முகக்கவசம், வனவிலங்குகளின் உயிருக்குக் கொடிய ஆபத்தாக மாறியுள்ளது.

விலங்குகளின் இருப்பிடம், நடைபாதை, கடற்கரை என எங்கு பார்த்தாலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள்.

அதன் பயன்பாடோ ஒரு முறை...

அது சிதைவதற்கோ பல நூறு ஆண்டுகளாகலாம்.

அதனால், அவை சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படுகிறது.

தூக்கிப்போடப்பட்ட முகக்கவசங்களை மெல்லும் மக்காக்ஸ் (Macaques) வகைக் குரங்குகள் மலேசியாவில் தென்பட்டன.

பிரிட்டனில், Seagull எனப்படும் கடற்பறவையின் கால்களில் சுமார் ஒரு வாரத்திற்கு முகக்கவசம் மாட்டிக்கொண்டது.

பின், அது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டது.

முகக்கவசங்கள் கடல்களையும் விட்டு வைக்கவில்லை.

சென்ற ஆண்டு மட்டும், 1.5 பில்லியனுக்கும் மேலான முகக்கவசங்கள் உலகின் பெருங்கடல்களைச் சென்றடைந்தன.

கடல்வாழ் உயிரினங்கள் அவற்றை உட்கொண்டு இறந்துபோகும் அபாயம் அதிகரித்துள்ளது.

அவற்றைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?

-- மறுபடி பயன்படுத்தக்கூடிய, துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை உபயோகிக்கலாம்.

--பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களைச் சரியான முறையில் வீசலாம்.

--முகக்கவசத்தின் இரு வார்களையும் வெட்டிய பின், அவற்றை வீசலாம்.

சுற்றுச்சூழலையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது என்று ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்