Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இனி முகக்கவசம் இன்றி வெளியே செல்லலாம்- பெருமையாகக் கூறும் இஸ்ரேல்

இஸ்ரேலில் முதன்முறையாக முகக்கவசங்களின்றி வெளியே சென்றனர் மக்கள்! 

வாசிப்புநேரம் -
இனி முகக்கவசம் இன்றி வெளியே செல்லலாம்- பெருமையாகக் கூறும் இஸ்ரேல்

படம்: AFP/JACK GUEZ

இஸ்ரேலில் முதன்முறையாக முகக்கவசங்களின்றி வெளியே சென்றனர் மக்கள்!

ஓராண்டு கழித்து கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக இஸ்ரேல் சொன்னது. அதன் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.


COVID-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆக விரைவில் மக்களுக்குக் கொண்டு சேர்த்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.

அங்கு பொது இடங்களில் இனி, மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 5 மில்லியன் பேருக்குப் போடப்பட்ட தடுப்பூசி, இஸ்ரேலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி சராசரி எண்ணிக்கையை 10,000இலிருந்து 200க்குக் குறைத்துள்ளது.

பள்ளிகள், உணவகங்கள், மதுக்கூடங்கள் போன்றவற்றை அந்நாடு மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.

உட்புறங்களில் ஒன்றுகூடல்கள் இடம்பெறலாம்; ஆனால் அவற்றில் கலந்துகொள்வோர் முகக்கவசங்கள் அணியவேண்டும்.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்