Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் பிரதமரைப் பாராட்டிய அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, இருநாடுகளுக்கிடையே சிறந்த வர்த்தக உடன்படிக்கை ஏற்படலாம் என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பிரிட்டன் பிரதமரைப் பாராட்டிய அதிபர் டிரம்ப்

(படம்: REUTERS/Kevin Lamarque/File Photo)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, இருநாடுகளுக்கிடையே சிறந்த வர்த்தக உடன்படிக்கை ஏற்படலாம் என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டனின் பிரதமர் தெரேசா மேயை அதிபர் டிரம்ப் பாராட்டிப் பேசினார்.

திருமதி மேயைச் சந்திப்பதற்குச் சில மணிநேரம் முன்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கு மாறாக அது அமைந்திருந்தது.

ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரதமர் மேயின் கொள்கைகளால் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஒன்றியத்துடன் எவ்வாறு பேரப்பேச்சு நடத்தவேண்டும் என்று தாம் கூறிய அறிவுரையைத் திருமதி மே உதாசீனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இரு தலைவர்களும் சந்திப்பதற்கு முன்னர் பிரிட்டனின் Sun நாளேட்டில் திரு. டிரம்ப்பின் பேட்டி வெளியானது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்