Images
  • may
    (படம்: Simon Dawson/Pool/AFP)

சிரியா தாக்குதல் தொடர்பில் குறைகூறலுக்கு ஆளாகியிருக்கும் மே

சிரியா மீதான தாக்குதலில் பிரிட்டன் ஈடுபட அனுமதித்ததன் தொடர்பில், பிரிட்டிஷ் பிரதமர் தெரேஸா மே பெரும் குறைகூறலுக்கு ஆளாகியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, சிரியா மீது ஆகாயத் தாக்குதல் நடத்த, அவர் அனுமதித்ததாக குறைகூறப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய முடிவுகளை எடுக்க, திருவாட்டி மேக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி ஏதும் தேவைப்படாது; அது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று திருவாட்டி மேயின் ஆதரவாளர்கள் கூறினர்.

இருப்பினும், அண்மையில் நடந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில், சிரியா மீது எந்தவிதத் தாக்குதலும் தொடுக்கப்படக்கூடாது என்று எடுக்கப்பட்ட முடிவிற்குப் புறம்பாக, திருவாட்டி மே செயல்பட்டதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சாடினர்.

Top