Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிசிலும்,பெர்லினிலும் மே தின ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மே தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மே தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சமூக அளவிலும் பொருளியல் ரீதியாகவும் நியாயமாக நடந்துகொள்ளும்படி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையின்மை அனுகூலங்களை அரசாங்கம் மாற்றத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கலகத் தடுப்புக் காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

பாதுகாப்புப் பணிகளில் குறைந்தது 5,000 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி பிரான்ஸ் முழுவதும் சுமார் 300 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெர்மானியத் தலைநகர் பெர்லினிலும் (Berlin) 5,000க்கும் அதிகமானோர் மே தின ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியின் குடிநுழைவுக் கொள்கைகள் முதல் அதிகரிக்கும் வாடகை வரை மக்கள் பலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கிருமிப்பரவலுக்கு எதிரான விதிமுறைகளை எதிர்த்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

அவர்கள் பட்டாசுகள், போத்தல்கள், கற்கள் ஆகியவற்றை அதிகாரிகள்மீது வீசியதில் மோதல் மூண்டது.

குப்பைத் தொட்டிகள், தடுப்புகள் போன்றவற்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளையும்மீறி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்