Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இளையரைப் பாலியல் ரீதியாகக் துன்புறுத்தியதால் தேவாலயத்தின் முன்னைய தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்

போப் பிரான்சிஸ், ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னைய தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பறிமுதல் செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இளையரைப் பாலியல் ரீதியாகக் துன்புறுத்தியதால் தேவாலயத்தின் முன்னைய தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்

(படம்: AFP)

வாசிப்பு நேரம்: 1 நிமிடம்

போப் பிரான்சிஸ், ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னைய தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பறிமுதல் செய்துள்ளார்.

88 வயது தியடோர் மக்கேரிக் (Theodore McCarrick), 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளையரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாய் வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அவர் அந்த முடிவை எடுத்தார்.

கடந்த ஆண்டு, ஜூலை மாதம், திரு. மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார்.

இவ்வாண்டு, ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.

பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அத்தகைய குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் திரு. மக்கேரிக் எவ்வாறு தேவாலயத்தில் உயர் பதவிகளில் பொறுப்பு வகித்தார் என்பது புரியாத புதிராய் இருப்பதாய் ஊடகங்கள் தெரிவித்தன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்