Images
  • McDonald's 1995
    (படம்:  AFP/William West)

அழுகிப்போகாத 24 ஆண்டு McDonald's பர்கர்


Mcdonald's விரைவு உணவகத்திலிருந்து 24 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட பர்கர் அழுகிப்போகவில்லை என்று கூறுகின்றனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவர்.

1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கேசி டின், எடுவர்ட்ஸ் நிட்ஸ் ஆகிய இருவரும் பதின்ம வயதினராக இருந்தபோது பர்கர் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாழ்க்கை முழுவதும் பர்கரை வைத்திருந்தால், பர்கர் எந்த நிலையை அடையும் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது இருவருக்கும்.

அதன் பின்னர், அவர்கள் பொருள்கள் வைக்கப்படும் அறையில் பர்கரை வைத்தனர்.

அண்மையில், அந்த பர்கரை கண்ட இருவரும், பர்கர் அழுகிப் போகாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பர்கரிலிருந்து துர்நாற்றமும் வரவில்லை என்று கூறினர்.

சமைக்கப்பட்ட பர்கரில் ஈரப்பதம் இருக்காது. அதில் கிருமிகள் வளர மாட்டா என்பதால் அது அழுகிப்போக வழியில்லை என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.



Top