Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: அனைத்துக் கிளைகளையும் மூடும் McDonalds, Subway உணவகங்கள்

McDonalds, Nando's, KFC, Costa Coffee, Subway, Pizza Express ஆகிய உணவகங்கள், கோப்பிக்கடைகள் பிரிட்டனில் உள்ள தங்கள் அனைத்துக் கிளைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
பிரிட்டன்: அனைத்துக் கிளைகளையும் மூடும் McDonalds, Subway உணவகங்கள்

(படம்: AFP/NICOLAS ASFOURI)

McDonalds, Nando's, KFC, Costa Coffee, Subway, Pizza Express ஆகிய உணவகங்கள், கோப்பிக்கடைகள் பிரிட்டனில் உள்ள தங்கள் அனைத்துக் கிளைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளன.

கொரோனா கிருமி வேகமாகப் பரவிவரும் வேளையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அனைத்து உணவகங்களும் அமர்ந்து சாப்பிடும் சேவையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் உணவைப் பொட்டலமாக வாங்கிச் செல்லும் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் பல உணவகங்கள் அதையும் நிறுத்துவதாகக் கூறின.

அதில் McDonalds-உம் ஒன்று.

விநியோகச் சேவை மட்டும் வழங்கினால், பெருங்கூட்டம் வரும்; அதைச் சமாளிப்பதும், பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதிசெய்வதும் சிரமம்; அதனால் மொத்தமாக மூடுவதே சிறந்தது என்று முடிவெடுத்ததாய் உணவகத்தின் பிரிட்டன் தலைவர் பால் போம்ராய் (Paul Pomroy) தெரிவித்தார்.

McDonalds உணவகம் தனது 1,270 கிளைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது. அதனால் சுமார் 135,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர்.

ஏப்ரல் 5 வரை ஊழியர்கள் தங்கள் சம்பளங்களைப் பெறுவர் என்று உணவகம் சொன்னது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்