Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடைகள் அகற்றப்படவேண்டும் என்றால் வடகொரியா உகந்த வகையில் நடந்துகொள்ளவேண்டும் - அதிபர் டிரம்ப்

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்படவேண்டும் என்றால் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் அதற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர்  டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தடைகள் அகற்றப்படவேண்டும் என்றால் வடகொரியா உகந்த வகையில் நடந்துகொள்ளவேண்டும் - அதிபர் டிரம்ப்

கோப்புப் படம்: REUTERS/Jonathan Ernst

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்படவேண்டும் என்றால் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் அதற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர்  டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது உச்சநிலைச் சந்திப்பு, அடுத்த வாரம் வியாட்நாமில் நடைபெறவிருக்கிறது.

தடைகளை அகற்றுவது பற்றி திரு கிம் அப்போது பேசலாம் எனக் கூறப்படுகிறது.

அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கைகளை வடகொரியா முதலில் தொடங்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவிருக்கும் சந்திப்புக்குப் பிறகு வடகொரிய தலைவரை மீண்டும் சந்திக்க எதிர்பார்ப்பதாகத் திரு டிரம்ப் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்