Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தட்டம்மையால் பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளைப் பாதுகாக்க நாடுகள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை: WHO

தட்டம்மையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பிள்ளைகளைப் பாதுகாக்க, உலக நாடுகள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

தட்டம்மையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பிள்ளைகளைப் பாதுகாக்க, உலக நாடுகள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தட்டம்மைக் கிருமியால் பாதிக்கப்படுவோர், அனைத்துலக அளவில் அதிகரித்துவருவதை நிறுவனத்தின் அண்மை அறிக்கை சுட்டியது.

கடந்த ஆண்டு சுமார் 10 மில்லியன் பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர்.

மரணமடனைந்த 140,000 பேரில் பெரும்பாலோர் பிள்ளைகள்.

ஐரோப்பிய நாடுகள், தட்டம்மையற்ற நாடுகள் என்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை இழந்துவிட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாத்தத்தோடு ஒப்புநோக்க தட்டம்மைச் சம்பவங்கள் கடந்த மாதம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது.

தட்டம்மையைத் தடுக்கப் பாதுகாப்பான தடுப்பு மருந்து எளிதாகக் கிடைக்கிறது என்றும் 50 ஆண்டு காலமாக அது நல்ல பலன் கொடுத்திருப்பதகாவும் நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், தட்டம்மைத் தொற்றைக் கையாள முடியாமல் போனால், ஒட்டுமொத்தமாக தோல்வி ஏற்பட்டதாகவே கருதப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்