Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: குழந்தைகளுக்கான புற்றுநோய் மருந்து பங்கீட்டு முறையில் விநியோகிக்கப்படலாம்

குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தின் இருப்பில் கடும் பற்றாக்குறை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: குழந்தைகளுக்கான புற்றுநோய் மருந்து பங்கீட்டு முறையில் விநியோகிக்கப்படலாம்

(கோப்புப் படம்: Aditya Romansa/Unsplash)

அமெரிக்கா: குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தின் இருப்பில் கடும் பற்றாக்குறை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் New York Times நாளேட்டு வெளியிட்டது.

அண்மையில் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தின் இருப்பு குறைந்துவருகிறது.

அவற்றுக்குப் பதிலாக வேறு மருந்து பயன்படுத்தலாம்.

ஆனால், குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் vincristine என்ற மருந்துக்கு பதிலாக எந்த மருந்தும் பயன்படுத்தமுடியாது என்று கூறப்படுகிறது.

மருத்துவர்கள் கூடிய விரைவில் மருந்து பங்கீட்டு முறையில்
விநியோகிக்கப்படலாம் என்று அஞ்சுகிறார்கள்.

அவ்வாறு நடந்தால், குழந்தைகள் ஒரு முறைக்கு உட்கொள்ளவேண்டிய மருந்தின் அளவில் பாதி மட்டுமே கொடுக்கப்படும்.

vincristine-ஐ இரண்டு மருந்து தாயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்து வந்தன.

அதில் Teva என்ற நிறுவனம் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டது.

Pfizer நிறுவனம் உற்பத்தி செய்வதில் சில சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்