Images
  • file photo
    (படம்: Reuters/Daniel Leal-Olivas)

அரச வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹேரி எடுத்த முடிவுக்கு ஒப்புதல்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகனும் அரச வாழ்க்கையிலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்க எடுத்திருக்கும் முடிவுக்கு எலிஸபெத் (Elizabeth) அரசியார் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பில், நேற்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

பொருளாதாரச் சுதந்திரத்தைக் காரணங்காட்டி பிரிட்டனிலும் வட அமெரிக்காவிலும் தங்களது நேரத்தை மாறிமாறிச் செலவிட எண்ணுகிறது அந்தத் தம்பதி.

தம்பதி அரச குடும்பத்தில் முழு நேர உறுப்பினர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

ஹேரியும் அவரது மனைவி மேகனும் புது வாழ்க்கையைத் தொடங்க விரும்புகின்றனர். அதற்கு நான் ஆதரவாக இருக்க விரும்புகிறேன்.

என்று எலிஸபெத் அரசியார் கூறினார்.

அதனையடுத்து, அரச வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கும் காலத்துக்கான ஆயத்தப் பணிகளை இனி தொடங்கவுள்ளது தம்பதி. 

Top