Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குடியேறிகளின் பிள்ளைகளைச் சந்தித்த அமெரிக்கத் தலைமகளின் சட்டை ஏன் கவனத்தை ஈர்த்தது?

திரு டோனல்ட் டிரம்ப்போ டுவிட்டர் பதிவில் மனைவியின் சட்டைக்கு அர்த்தம் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
குடியேறிகளின் பிள்ளைகளைச் சந்தித்த அமெரிக்கத் தலைமகளின் சட்டை ஏன் கவனத்தை ஈர்த்தது?

(படம்: AFP/Mandel Ngan)

அமெரிக்கத் தலைமகள் மெலனியா டிரம்ப்,
குடியேறிகளின் பிள்ளைகளைச் சந்திக்கச் சென்றதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைச் சந்திக்கச் சென்றபோது திருமதி மெலனியா டிரம்ப் அணிந்திருந்த ஆடையும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

"I really don't care, do you?" என்று ஆங்கிலத்தில் அவரின் சட்டையில் எழுதப்பட்டிருந்தது.

அதாவது " எனக்குக் கவலை இல்லை, உனக்கு இருக்கிறதா? " என்று அர்த்தம்.

என்ன சொல்ல நினைக்கிறார் எனப் பலர் கேள்வி எழுப்பினர்.

யாருக்கான செய்தி அது என்றும் இணையவாசிகள் வினவினர்.

டெக்சஸ்ஸுக்கு விமானம் ஏறச் சென்ற திருமதி டிரம்ப்பின் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவுகின்றன.

குடிபெயர்ந்தோரிடமிருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரிப்பது குறித்து அனைத்துலக அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி டிரம்பின் பேச்சாளர் சட்டையின் எழுத்துக்கள் எதையும் பிரதிபலிக்கவில்லை என்றார்.

தலைமகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல் ஊடகம் அவரின் சட்டையில் கவனம் செலுத்துவது சரியல்ல என்றும் அவர் சொன்னார்.

ஆனால் திரு டோனல்ட் டிரம்ப்போ டுவிட்டர் பதிவில் மனைவியின் சட்டைக்கு அர்த்தம் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

ஊடகத்தில் பரவும் பொய்த் தகவல்களைப் பற்றித் தமக்குக் கவலையில்லை

என்பதை அது குறிப்பதாக அவர் சொன்னார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்