Images
  • Melania Dismisses
    (படம்: AFP)

திருமண வாழ்வில் பிரச்சினை இல்லை: டிரம்ப் மனைவி மிலெனியா


அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மனைவி மிலெனியா டிரம்ப், தமது திருமணம் சிக்கலில் இருப்பதாக பரவி வரும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.

ABC News நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

திரு. டிரம்ப் தங்களோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக ஆபாசத் திரைப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸும் (Stormy Daniels) முன்னாள் Playboy விளம்பர அழகி கெரன் மெக்டூகலும் (Karen McDougal) குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திரு. டிரம்ப் அவர்களது குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.

இந்நிலையில் தாம் தமது கணவர் மீது அன்பு வைத்திருப்பதாகவும் ஊடகங்கள் தங்களது திருமண வாழ்வைத் தவறாக சித்திரிப்பதாகவும் திருமதி டிரம்ப் நேர்காணலில் கூறினார்.

 

Top