Images
  • melania trump (1)
    (படம்: AFP/Mandel Ngan)

டிரம்ப்பின் மாமனார், மாமியாருக்கு அமெரிக்கக் குடியுரிமை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்பின் பெற்றோருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மெலானியா டிரம்ப்பின் பெற்றோர் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்கக் குடியுரிமைக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

குடியுரிமை பெறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகின எனும் விவரத்தை அவர்களது குடிநுழைவு வழக்கறிஞர் தெளிவுபடுத்தவில்லை.

அதிபர் டிரம்ப், குடிநுழைவுக் கொள்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில், அவரின் மாமனாரும் மாமியாரும் அமெரிக்கக் குடிமக்களாகியிருக்கின்றனர்.

70 வயதிற்கு மேற்பட்ட இருவரும், அமெரிக்காவில் தங்களது மகளுடனும் பேரனுடனும் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
 

Top