Images
  • Melania Trump
    (படம்: AFP)

உலகில் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆகப் பிரபலமானவர்களில் தாமும் ஒருவர்: மிலெனியா டிரம்ப்


உலகில் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கப்படும் பிரபலமானவர்களில் தாமும் ஒருவர் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலெனியா டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிறார் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வூட்டுவதற்காக 'Be Best' என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார் மிலெனியா டிரம்ப். சமூக வலைத்தளங்களில் காணப்படும் கேலி, கிண்டல்களையும் அவர் அதில் இணைத்துள்ளார்.

திருமதி டிரம்ப் தாம் அணியும் ஆடைகளிலிருந்து, கூறும் கருத்துகள் வரை சமூக ஊடகங்களில், மோசமான கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

கடந்த வாரம், அவர் கென்யாவுக்குச் சென்றபோது அமெரிக்க ஊடகத்திற்குப் பேட்டியளித்தார்.

அப்போது, கேலி, கிண்டல் சம்பவங்களால் பாதிப்புக்கு ஆளாகும் உலகின் ஆகப் பிரபலமானவர்களில் தாமும் ஒருவர் என்று அவர் சொன்னார்.


 

Top