Images
  • mel attack
    படம்: Reuters

மெல்பர்ன் கத்திக் குத்துத் தாக்குதல், பயங்கரவாத செயல்-ஆஸ்திரேலியக் காவல்துறை

மெல்பர்ன் நகரில் சோமாலிய ஆடவர் 3 மூன்று பேரைக் கத்தியால் குத்தித் தாக்கிய சம்பவத்தை பயங்கரவாதச் செயலாகக் காவல்துறையினர் வகைப்படுத்தியுள்ளனர்.

அந்த ஆடவர் ஓட்டிவந்த வாகனத்தில், எரிவாயுக் கலன்கள் இருந்ததையும் அவை தீப்பிடித்து கொண்டதையும் காவல்துறையினர் சுட்டிக் காட்டினர்.

ஆடவர் குத்தி மூவரில், ஒருவர் மாண்டார்.

பின்னர் சந்தேக நபர் காவல் அதிகாரியால் சுடப்பட்டுப் பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

அண்மைச் சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு, பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கூடுதலான அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று நம்பப்படுகிறது.  

Top