Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: 2 வார முடக்கநிலை முடிவுக்கு வந்தது

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், 2 வாரங்களாக நடப்பில் இருந்த முடக்கநிலை முடிவடைந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், 2 வாரங்களாக நடப்பில் இருந்த முடக்கநிலை முடிவடைந்துள்ளது.

இருப்பினும், புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களைத் தவிர்க்க, அந்நகரிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

மெல்பர்ன் குடியிருப்பாளர்கள், முகக்கவசம் அணிவது கட்டாயம்.

அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டுமே மக்கள், தங்களுடைய வீடுகளில் இருந்து 25 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய அனுமதி உண்டு.

தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மெல்பர்ன் அதிகாரிகள் கூறினர்.

கட்டுப்பாடுகளை எப்போது தளர்த்துவது என்பது பற்றி முடிவெடுக்கும் முன், கிருமிப்பரவல் நிலவரம் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்