Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

9 மாத முடக்கநிலைக்குப் பிறகு, குதூகலத்தில் மெல்பர்ன்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்  தலைநகர் மெல்பர்ன், சுமார் 9 மாத முடக்கத்துக்குப் பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பர்ன், சுமார் 9 மாத முடக்கத்துக்குப் பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.

தெருக்களில் ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், நேரடி இசை நிகழ்வுகள் எனக் குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்துள்ளன. மதுக்கூடங்களும் உணவகங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.

இன்று காலை பெய்த மழையைப் பொருட்படுத்தாமல் அதிகமானோர் அத்தகைய கடைகளுக்குள் நுழையக் காத்திருந்தனர். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அவ்வாறு, பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி உண்டு.

இந்நிலையில், விக்டோரியாவில் டெல்ட்டா வகைக் கிருமித்தொற்று அரிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு மேலும் 1,750 பேர் பாதிப்படைந்துள்ளனர். 24 மணி நேர இடைவெளியில் 9 பேர் மாண்டனர்.

எனினும் விக்டோரியா, அதன் மக்களில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்று முனைப்புடன் இயங்குகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்