Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: மெல்பர்னில் திட்டமிடப்பட்டதற்கு முன்னரே முடிவுக்கு வரவிருக்கும் முடக்கநிலை

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடப்பில் உள்ள முடக்கநிலை, திட்டமிடப்பட்டதற்கு முன்னரே முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடப்பில் உள்ள முடக்கநிலை, திட்டமிடப்பட்டதற்கு முன்னரே முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.

அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகரித்துவருவதால் அந்த முடிவு எடுக்கப்படுகிறது.

இருப்பினும், விக்டோரியா மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில், 2,297 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் 11 பேர் மாண்டனர்.

மெல்பர்ன் நகரில் செய்தியாளர்க் கூட்டத்தில் பேசிய விக்டோரிய மாநில முதல்வர் டேனியல் அன்ட்ரூஸ் (Daniel Andrews), நகரை மீண்டும் திறப்பதற்கான உத்திபூர்வத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மெல்பர்ன் நகரில் அடையாளம் காணப்பட்டனர்.
இருப்பினும் அங்கு நடப்பில் உள்ள இரவுநேர ஊரடங்கு தளர்த்தப்படவிருக்கிறது.

வர்த்தகங்கள் கடுமையான சமூக இடைவெளி விதிமுறைகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

மெல்பர்ன் நகரில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டையும் 90 விழுக்காட்டையும் எட்டும்போது, கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்