Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: மெல்பர்னின் முடக்கநிலை முடிவுக்கு வருகிறது

ஆஸ்திரேலியா: மெல்பர்னின் முடக்கநிலை முடிவுக்கு வருகிறது

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் விதிக்கப்பட்ட இரண்டுவார முடக்கநிலை வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக அளவில் பதிவாகும் தொடர்பில்லாக் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விக்டோரியா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகியிருக்கும் ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.

அந்த நபருக்கு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு இருந்தது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெல்பர்ன் குடியிருப்பாளர்கள் முடக்கநிலை நீக்கப்பட்ட பின்னரும்
சில கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும்.

இருப்பிடங்களை விட்டு 25 கிலோமீட்டர் தொலைவுவரை மட்டுமே அவர்கள் பயணம் செய்யலாம்.

மருத்துவமனைகளிலும் கேளிக்கைக் கூடங்களிலும் கூடுவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.

உள்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்