Images
  • manchester united
    (படம்: Pool via REUTERS/Martin Rickett/File Photo)

அதிநவீன முறையில் Manchester United மீது இணையத் தாக்குதல்

Manchester United காற்பந்தாட்டக் குழுவின் தொழில்நுட்ப அமைப்புகளை அதிநவீன முறைகளில் ஊடுருவ சிலர் முயற்சிசெய்ததாகக் குழு தெரிவித்துள்ளது.

அந்த இணையத் தாக்குதலைக் கட்டுப்படுத்த குழு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது .

தற்போது அதைப் பற்றிய விசாரணை இடம்பெறுகிறது. அதன் தொடர்பில், நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்தால் ஏற்படக்கூடிய தொழில்நுட்பத் தடைகளைக் குறைக்கும் முயற்சியும் இடம்பெற்றுவருவதாகக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ரசிகர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் ஏதும் அத்துமீறப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை எனவும் குழு குறிப்பிட்டது. 

Top