Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: Merck நிறுவனத்தின் மாத்திரைகளுக்கான ஒப்புதல் குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்கப்படலாம்

அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான 

வாசிப்புநேரம் -
COVID-19: Merck நிறுவனத்தின் மாத்திரைகளுக்கான ஒப்புதல் குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்கப்படலாம்

(கோப்புப் படம்: Merck & Co via AP)

அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான Merck, கிருமித்தொற்றுக்குச் சிகிச்சையளிக்கும் தனது மாத்திரையின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும்படி அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த மாத்திரை COVID-19 நோய்த்தொற்றால்
கடுமையாய் பாதிக்கப்படும் அல்லது மரணமடையும் அபாயத்தைப் பாதியாகக் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக Merck நிறுவனம் கூறியது.

அதன் தொடர்பில் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த மருந்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால்
COVID-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்த எளிதில் உட்கொள்ளக்கூடிய முதல் மாத்திரையாக அது அமையும்.

தற்போது அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றுள்ள மருந்துகள் அனைத்துமே ஊசி வழி செலுத்தப்படுபவை.

ஒப்புதல் அளிப்பதற்கு முன் மருந்தின் பாதுகாப்புத் தன்மையை அதிகாரிகள் நன்கு பரிசோதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து முதலியவை அந்த மாத்திரையைப் பெறுவதற்குக் காத்திருக்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்