Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கேரள மாநிலத்துக்குச் செல்லவிருக்கும் சிங்கப்பூரின் பேரிடர் நிவாரணக் குழு

இம்மாதம் 8ஆம் தேதி முதல் 300,000த்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக மாநிலப் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கேரள மாநிலத்துக்குச் செல்லவிருக்கும் சிங்கப்பூரின் பேரிடர் நிவாரணக் குழு

(படம்:Reuters)

இந்தியாவின் கேரள மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சிங்கப்பூரின் Mercy Relief அமைப்பு, பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அனுப்பவிருக்கிறது.

வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் கடந்த இரண்டு வாரங்களில் 300க்கும் அதிகமானோர் மாண்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் 300,000த்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக மாநிலப் பேரிடர் நிர்வாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

(படம்:AFP)

(படம்:Reuters)
(படம்:AFP)

மீட்புக் குழுவினர் நாளை சிங்கப்பூரிலிருந்து கேரளத்திற்குப் புறப்படுவர்.

Mercy Relief அமைப்பு அரிசி, கோதுமை, பருப்பு, உப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்