Images
  • metal straw (1)
    (படம்: Mark Pazolli/Flickr)

உறிஞ்சுகுழல் கண்ணில் குத்தி மாண்ட பெண்

பிரிட்டனில் உலோகத்தாலான உறிஞ்சுகுழல் கண்ணில் குத்தியதைத் தொடர்ந்து மூளை பாதிக்கப்பட்டு ஒரு பெண் மாண்டார்.

சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நடந்தது.

60 வயது எலனா ஸ்ட்ருத்தர்ஸ் கார்ட்னர் (Elena Struthers-Gardner) குதிரை ஓட்டுவதில் அனுபவம் கொண்டவர்.

அதன் தொடர்பில் எலனாவுக்கு ஏற்பட்ட முதுகுக் காயத்தால் அவர் அவ்வப்போது கீழே விழுந்துவிடுவார்.

அன்றும் அவ்வாறு கீழே விழுந்துவிட்டார்.

அவர் கையிலிருந்த கிண்ணத்தில் உலோக உறிஞ்சுகுழல் அவரின் இடது கண்ணைக் குத்தியது.

சவுத்ஹேம்ப்ட்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எலனா அடுத்த நாளே மாண்டார்.

பிரிட்டன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிளாஸ்டிக் குழலுக்குத் தடைவிதிக்கவிருக்கிறது.

ஆனால் உறிஞ்சுகுழல்களைக் கொண்டு பானங்களை அருந்தவேண்டிய உடற்குறையுள்ளோர் பிளாஸ்டிக் குழல்கள் மீதான தடையை எதிர்க்கின்றனர்.

அதேநேரம் உலோக உறிஞ்சுகுழல் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அஞ்சுகின்றனர். 

Top