Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மீண்டும் நடக்கும் கனவுடன் வாழும் உலகின் ஆக அதிக எடையுடன் இருந்த நபர்

உலகின் ஆக உடற்பருமாக இருந்த யுவான் பெட்ரோ ஃபிராங்க்கோ, 250 கிலோ கிராம் எடையைக் குறைத்துள்ளார். 

வாசிப்புநேரம் -
மீண்டும் நடக்கும் கனவுடன் வாழும் உலகின் ஆக அதிக எடையுடன் இருந்த நபர்

படம்: AFP/ULISES RUIZ

மெக்சிகோ: உலகின் ஆக உடற்பருமாக இருந்த யுவான் பெட்ரோ ஃபிராங்க்கோ, 250 கிலோ கிராம் எடையைக் குறைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் எடை 595 கிலோ கிராமாக இருந்தது. உலக கின்னஸ் புத்தகத்திலும் உலகின் ஆக எடையுள்ள கொண்ட நபர் என்ற சாதனையும் அவர் பெற்றார்.

படம்: AFP/ULISES RUIZ

படுத்த படுக்கையாக இருந்த அவர், நீரிழவு நோயாலும் இரத்த அழுத்தத்தாலும் அவதியுற்றார். உடல் எடையைக் குறைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் இரைப்பை தொடர்பான இரண்டு அறுவைச் சிகிச்சையைச் செய்தார். அதனைத் தொடர்ந்து 6 மாதங்கள் அவர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தார்.

தற்போது அவர் 345 கிலோ கிராம் எடையில் உள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அவர் மேலும் 100 கிலோ கிராமிற்கு மேல் குறைக்க இலக்கு வைத்துள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்